telegram
whatsapp
youtube
instagram
twitter
telegram

mail

telephone

+91 8939 4673 23






மேலும்

தமிழில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதக் கற்றுத்தரும் ஆட்சித் தமிழ் அகாடமி! | Blog

தமிழில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதக் கற்றுத்தரும் ஆட்சித் தமிழ் அகாடமி!

Nov 7, 2020 - 4 min read

Share

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள்தான் அதிகம். இப்படி அரசுப் பள்ளியில் தமிழில் படித்துவரும் ஏழை மாணவர்களை ஐ.ஏ.எஸ் ஆக்கும் நோக்கில் நிறுவப்பட்டு பல ஏழை மாணவர்களை வெற்றி பெறவும் செய்து வருகிறது ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி.

Kungumam News“ஆங்கிலத்தில் தேர்வு எழுதக் கற்றுக்கொடுக்கும் அகாடமிகள் பல இருக்கும் இத்தமிழ்நாட்டில், கடந்த பத்து வருடங்களாகத் தமிழ்மொழியில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதக் கற்றுக்கொடுத்து பல வெற்றியாளர்களை உருவாக்கி வருகிறோம்” என்று பெருமிதத்தோடு தெரிவிக்கிறார் ஆட்சித்தமிழ் அகாடமியின் நிறுவனர் வீரபாபு.

“அரசுப் பள்ளியில் தமிழ் வழி கற்ற மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் தேர்வு எழுதுவதென்பது வேப்பங்காய் கசப்பாக உள்ளது. தாய்மொழியில் கல்வி கற்பது என்பது ஒவ்வொரு மாணவனின் உரிமை. ஆனால், இங்கு ஆங்கிலத்தில் கற்றுக்கொடுக்கத்தான் பல அகாடமிகள் உள்ளன. இதன் காரணமாகவே பல மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைகின்றனர்.

இந்த நிலையை மாற்றுவதற்காகவும், ஐ.ஏ.எஸ். ஆவதைக் கனவாகக்கொண்ட அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அவர்களின் கனவை நனவாக்க உருவாக்கப்பட்டதுதான் இந்த ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி” என்கிறார்.அவர் மேலும், “ஐ.ஏ.எஸ் தேர்விற்குத் தமிழில் புத்தகங்கள் கிடையாது. தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் தேர்வு எழுதக் கற்றுத் தரும் அகாடமிகள் இல்லாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். ஆங்கிலத்தில் இருக்கும் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அதனை மாணவர்களுக்குத் தருகிறோம்.

இம்மொழிபெயர்ப்பு புத்தகங்களைப் படித்துதான் இங்குப் படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். இதுபோக, தமிழக அரசுப் பணிகளுக்கான அனைத்து குரூப் தேர்வுகள் மற்றும் டெட் தேர்வுகள் எழுதவும் ஆட்சித் தமிழ் அகாடமியில் கற்றுத்தரப்படுகிறது” எனக் கூறும் வீரபாபு, “ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகி வரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் டெட் தேர்வுக்கான வ்ினாத்தாள் தொகுப்புகளை வெளியிட்டுள்ளோம்.

இதில் தாள் 1 மற்றும் தாள் 2 ஆகிய இரண்டு தாள்களுக்கும் தனித்தனியே மொத்தம் 40 மாதிரி வினாத்தாள்களின் தொகுப்பாக உருவாக்கியுள்ளோம். இதனை முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநரும் தற்போதைய மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான நடராஜ் முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டோம்.

அவ்வெளியீட்டு விழாவில் பல ஆசிரியர்கள் கலந்துகொண்டு மாதிரி வினாத்தாள்களைப் பெற்றுக்கொண்டனர். தமிழ்நாட்டு மாணவர்களைத் தாய்மொழியில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுத வைக்கப் பாடுபடும் இவர்போன்றவர்கள் அடுத்தடுத்து தோன்றினால் தாய்மொழிக் கல்வி எனும் விளக்கு அணையாமல் இருக்கும்!” என்று ஆதங்கத்தோடு தெரிவித்தார்.

– வெங்கட் குருசாமி

Recent Posts


More Articles


logo

தலைமை அலுவலகம்

ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி, 142,ஜி.எஸ்.டி ரோடு, வெற்றி தியேட்டர் எதிரில், குரோம்பேட்டை, சென்னை – 600 044. (சரவணா ஸ்டோர்ஸ் அருகில்)

கிளை அலுவலகம் :

ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி , நன்மயம் (3வது தளம்), 19, அழகேசன் ரோடு, வேதாச்சலம் நகர், (செயின்ட்ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளி எதிரில்), செங்கல்பட்டு – 603001

முகப்பு

  • எங்களை பற்றி
  • படிப்புகள்
  • டி.என்.பி.எஸ்.சி இலவச போட்டித்தேர்வு
  • எங்களை பற்றி
  • டி.என்.பி.எஸ்.சி இலவச போட்டித்தேர்வு
  • படிப்புகள்

முகப்பு

  • எங்களை பற்றி
  • படிப்புகள்
  • டி.என்.பி.எஸ்.சி இலவச போட்டித்தேர்வு
  • எங்களை பற்றி
  • டி.என்.பி.எஸ்.சி இலவச போட்டித்தேர்வு
  • படிப்புகள்

முகப்பு

  • எங்களை பற்றி
  • படிப்புகள்
  • டி.என்.பி.எஸ்.சி இலவச போட்டித்தேர்வு
  • எங்களை பற்றி
  • டி.என்.பி.எஸ்.சி இலவச போட்டித்தேர்வு
  • படிப்புகள்

Follow us on

twitter
facebook
instagram
telegram

  Aatchitamizh IAS Academy